Sunday, August 17, 2014

தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தும் தமிழக முதல்வரின் உன்னத திட்டங்கள்
தமிழக முதல்வரின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியதாவது:–

தமிழக முதல்வர் கல்வி ஒன்றே நிலையான செல்வம் என்பதை அறிந்து இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கென இந்நிதியாண்டில் ரூபாய் 17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை புரிந்துள்ளார். இது அரசின் வேறு எந்த துறைக்கும் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து இத்தைகைய நிதியை ஒதுக்கி மாணவ, மாணவிகளுக்கு பயன்தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தமிழக முதல்வரின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கல்வியின் தரம் உயர்ந்து வருகிறது. முதல்வரின் நடவடிக்கைகளால் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகள் தரம் உயர்ந்தும் பாதுகாப்பான முறையிலும் செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் இதுபோன்ற பல்வேறு அரசின் நலத்திட்டங்களால் தமிழகம் ஒவ்வொரு நாளும் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது:–
மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தில் 12–ம் வகுப்பு பயின்ற 16.16 லட்சம் மாணவ–மாண வியர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 1,637.78 கோடி செலவில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப் பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் பயிலும் மாணவ–மாணவியர்களுக்கு கல்வி கற்க உதவும் அனைத்து உபகரணங்கள், சீருடைகள் போன்றவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கல்வி தேர்ச்சி விகிதம் மற்றும் கல்வியின் தரம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து மாணவ– மாணவிகள் கருத்துக்கள் வருமாறு– மாணவி தீபா (கோபால்பட்டி)
நான் கோபால்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11–ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தைஅய்யப்பன் பூக்கடை வியாபாரம் செய்து வருகிறார். எனவே, பெரிய அளவிலான வசதி வாய்ப்புகள் எதுவும் எங்களுக்கு இல்லை. எனது பள்ளியிலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்தில் வீடு அமைந்துள்ளது. அடுத்த வருடம் 12–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு என்பதால் இந்த ஆண்டு முதலே படிப்பிற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. எனது நேரத்திற்கு தகுந்தாற்போல் முன்னதாகவே பஸ் வசதி இல்லாத சூழ்நிலையில் பள்ளி வந்து செல்ல கஷ்டப்பட்டு வந்தேன். தமிழக முதல்வர் எங்களைப் போன்ற கல்வி கற்கும் மாணவ–மாணவியர்களின் சிரமத்தைப் போக்க அனைத்து உதவிகளையும் செய்து வரும் நிலையில் விலையில்லா மிதிவண்டிகள் புத்தம் புதிதாக ஓட்டுவதற்கு சிரமமின்றி சரியான நேரத்திற்கு எங்களுக்கு வழங்கியது மிகுந்த பயன்பாடாக உள்ளது.
மாணவர் தினேஷ்பாபு:– நான் துரைக்கமலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11–ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எனது பள்ளியிலிருந்து பண்ணுவார்ப்பட்டியில் எனது வீட்டிற்கு பஸ்சில்தான் சென்று வரும் சூழ்நிலை உள்ளது. கூலி வேலை செய்து வரும் எனது தந்தையிடம் தனியார் பஸ்சில் பள்ளி சென்று வர மாதம் 500 முதல் 600 ரூபாய் பெற வேண்டியிருந்தது. இது எங்களைப் பொறுத்தவரை மாத மாதம் பெரிய தொகையாகும்.
தமிழக முதல்வரால் பள்ளி மாணவ–மாணவியர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளில் விலையில்லா பஸ் பயண அட்டை வழங்கினார். இதன் மூலம் பஸ் பயணத்திற்கென பணம் ஒதுக்க வேண்டும் என்ற மன அழுத்தம் ஏதும் இல்லாமல் மகிழ்ச்சியோடு பள்ளி சென்று வர ஏதுவாக உள்ளது. எங்களைப் போன்ற வசதி குறைந்த மாணவ– மாணவியர்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கல்வி கற்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு என்றென்றும் உதவிகரமாக இருப்போம்.
byஅரசுப் பள்ளியில் பயில்

அரசு பள்ளிகள் தரம்